ஊழல் செய்யாமல் அரசியலில் யார் நேர்மையாக உள்ளனர்..? – தேவகவுடா…
கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசியலில் யார் நேர்மையாக உள்ளனர் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி ஒப்பந்ததாரர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சர்சையை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர் தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா காரணம் என கூறி இவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
இந்த நிலையில் கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவ கவுடா தற்போதைய சூழலில் பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், யார் நேர்மையாக உள்ளனர் என கேள்வி எழுப்பினார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த போது ஊழல் கமிஷனை குறிப்பிடும் விதமாக மாநில அரசை 10 சதவீத அரசு என அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
