பிக்பாஸ் சீசன் 5: இந்த வாரம் எலிமினேசன் இவரா?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 18 பெயர்களில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிய நிலையில் மீதி உள்ள 17 போட்டியாளர்களில் 15 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மிக அதிக வாக்குகளை ராஜூ ஜெயமோகன் மற்றும் பிரியங்கா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

abhishek and chinnaponnuஇந்த நிலையில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் அபிஷேக் அல்லது சின்னப்பொண்ணு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சின்னப்பொண்ணு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் பட்டியலில் உள்ள பதினைந்து பெயர்களில் வெளியேறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment