
தமிழகம்
அதிமுக கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? இருதரப்பினரும் ஆஜராக நோட்டீஸ்!!
இன்றைய தினம் அதிமுகவிலேயே பெரும் கலவரம் ஏற்பட்டது. ஏனென்றால் இன்று அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
மேலும் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கூடிய வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது. இதனால் வழக்கு மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து தகவல் கிடைத்தது.
மேலும் வானரகத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்க அதிமுக அலுவலகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கேள்விக்குறியான நிலையில் காணப்படுகிறது.
அதிமுக கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து வரும் 25ஆம் தேதி விளக்கம் தர வேண்டும் என்று கூறப்படுகிறது. கட்சி அலுவலகத்துக்கு உரிமை கூறுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையேயான பிரச்சனை பொது அமைதியை பாதித்ததாக தெரிகிறது.
எனவே வருவாய் துறை அதிகாரிகள் முன்பு இருதரப்பினரும் ஆஜராகி 25 ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் வகையிலேயே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையான மோதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மோதலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளது.
