Connect with us

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? – வருவாய்துறை நோட்டீஸ்!!

ADMK Office

தமிழகம்

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? – வருவாய்துறை நோட்டீஸ்!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூம் எடுத்திற்கும் நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

சென்னை  ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை செயலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மோதல்கள் தீவிரமாகியுள்ளதால் ஓபிஎஸ் தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தை சூறையாடினர்.

இந்நிலையில்  அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ள நிலையில் அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது குறித்து வருகின்ற 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதனிடையே கட்சி அலுவலகத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக இரு தரப்பினரும் இடையே ஏற்பட்ட பிரச்சினை பொது அமைதியை பாதித்ததாக நோட்டீஸ்சில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் வகையிலேயே அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top