யாரை மிரட்டிகிறீர்கள் பழனிசாமி..? மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினையா? – முதல்வர் ஆவேசம்..
இது தொடர்பாக இன்று காணொளி காட்சி மூலம் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்றும் திமுக ஆட்சி என்பது விடியல் தரக்கூடிய ஆட்சி என முதல்வர் தெரிவித்தார்.
இதனிடையே பூனை கண்னை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாதது என்பது பழமொழி என்றும் பழனிசாமி அவர்கள் கண்னை மூடிக்கொண்டால் தமிழ்நாடு இருண்டு விடாது என்பது தமிழ்நாட்டு மக்கள் சொல்லக்கூடிய புதுமொழி என தெரிவித்தார்.
தன்னைதாவே ஏமாற்றி கொள்வதன் மூலமாக நாட்டின் மக்களை ஏமாற்றுவதாக பழனிசாமி நினைப்பதாகவும் 2024- ஆண்டு நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதாகவும் சொல்வது இவருக்கு மட்டும்தான் தெரியுமா என கேள்விஎழுப்பியுள்ளார்.
பாஜகவிடம் சேருவதாகவும் யாரை மிரட்டிகிறீர்கள் பழனிசாமி என்றும் மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை மிரட்ட முடியும் என்பதை கற்பனையிலும் கனவு காணாதீர்கள் என தெரிவித்தார்.
மேலும், சசிகலாவின் காலை பிடித்துக்கொண்டு பதவிக்கு வந்ததாகவும் தனது பதவியை நிலைப்படுத்திக்கொண்டு சசிகலாவின் காலை வாறிவிடுவது பழனிசாமிக்கு பொருந்தும் என்றும் டெல்லிக்கு காவிடி எடுத்த மொத்த உருவன் தான் நீங்க என்று குற்றம்சாட்டியுள்ளார்.
