ஒரு திரைப்படமும் பல நடிகர் நடிகைகளுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தரும். அவர்கள் நட்சத்திரங்களாக ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து கொண்டு இருப்பார்கள். அவர்களின் இத்தகைய திரையின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது திரைக்குப்பின்னால் இருக்கும் இயக்குனரின் கடினமான உழைப்பு தான் இயக்குனர்.
இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு காட்சிகளும் தான் வெள்ளித்திரையில் இங்கு பெரிய சினிமா வெளிவந்து மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி அடைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இயக்குனர்களின் பட்டியலை கூறுவது மிகவும் கடினமான ஒன்றுதான். அவர்களில் தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன், கதாநாயகி மற்றும் இல்லாமல் அனைவருக்கும் நுணுக்கமாக காட்சிகளை வைத்து இயக்குபவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் நடிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து கொடுக்கும். இந்த சூழலில் இவர் தற்போது இயக்குவதை காட்டிலும் அதிக அளவு நடிப்பில் ஆர்வம் காட்டிக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இவரின் நடிப்பு திறமையை திரை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
அதன் பின்னர் ருத்ரதாண்டவம் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். இதனால் இவர் சினிமா வட்டாரத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார். இதனை போக்கும் வகையில் இவரைப்போல் சிறுவன் ஒருவன் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறான். அவனை இணையவாசிகள் மினி பட்ஜெட் கௌதம் வாசுதேவ் மேனன் என்று கூறிக்கொண்டு வருகின்றனர்.