ஐபிஎல் ஏலம்:ரெய்னாவுக்கு இடமில்லை! சிஎஸ்கே தக்கவைக்கும் வீரர்கள் யார்?

தற்போது சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று முடிந்தது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே

இவ்வாறிருக்கையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நடைபெற்ற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை உள்ளது. அந்த நான்கு வீரர்கள் 3 பேர் இந்திய வீரர்கள் ஆக இருக்கலாம் என்றும் இரண்டுபேர் அயல்நாட்டு வீரர்களாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 4 வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது ஐபிஎல்  விதியாகும்.  இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அணியில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட் ஆகிய மூவரை தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அயல்நாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் டூபிளசி அல்லது பிராவோ ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ரெய்னாவுக்கு இடமில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment