அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட்நியூஸ்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் இரண்டில் எதை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்
மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தொடர்பாகவும் அரசின் பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வரும் சாதனைகள் தொடர்பாகவும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும், தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷுடம் இலவச மடிகணினி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப்புகள் வழங்குவது குறித்து
ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், லேப்டாப் அல்லது டேப் வழங்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் விட்டுச் சென்ற 1.75 லட்சம் மாணவர்களுக்கும் சேர்த்து நிதி நிலை சரியாக சரியாக மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேஜைகள் உடைத்து ராகளையில் ஈடுப்பட்ட 5 மாணவர்களை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு பெற்றோர்கள் அழைத்து அறிவுரை கூறி உள்ளதாகவும்.

மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதை தவிர்க்க தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிதி நிலை சரியான பிறகு நிறைவேற்றப்படும்
என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.