Connect with us

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

rain 6

தமிழகம்

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

தமிழகத்தில் நாளைய தினத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளைய தினத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் நாளை மறுநாள் ரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மழை, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

வருகின்ற செப்.7-ம் தேதி ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top