இன்று முதல் 21-ம் தேதி வரை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 மணி நேரத்திற்கு இதே வலுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் 20, 21ம் தேதிகளில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளைய தினத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வருகின்ற 21-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.