பிக்பாஸ் நிகழ்ச்சியின் எவிக்சனில் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான போட்டியாளர்!

கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதியில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 13 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. அனன்யா, பவா செல்லத்துரை இருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்த வார எவிக்ஷனில் விஷ்ணு, மாயா, பிரதீப், அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா மற்றும் பூர்ணிமா என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரம் வெளியாகப்போவது யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறியுள்ளது.

தற்போது இரண்டாவது வார எவிக்ஷன் என்பதால் யார் வெளியேறுவார்கள்? என்பது சந்தேகமாக உள்ளது. கடந்த வாரம் யுகேந்திரன் அல்லது பவா செல்லத்துரை இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக அனன்யா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இளமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அனன்யா வெளியேறியது பார்வையாளர்கள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பவாவும் யூகத்திற்கு மாறாக தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்பது மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.விஷ்ணு, மாயா, பிரதீப், அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா என ஏழு போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இருந்தனர்.

இதில் மாயா, பூர்ணிமா, அக்ஷயா மூவரில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மாயா அந்த வீட்டில் செய்யும் அட்டகாசங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால் அவர் தான் வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

இளமையான போட்டியாளராக திகழும் மாயா நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்து ஒரு சிறந்த போட்டியாளராக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும் பவா நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வெளியேறி விட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் நடைபெறாது என தெரிகிறது. இதனால் மாயா இந்த வாரம் தப்பித்து விட்டார். என்றாலும் வரும் வாரங்களில் அவர் வெளியேற எக்கச்சக்கமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.