கூடங்குளம்: அபாய அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதா? வைகோ எதிர்ப்பு!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூடங்குளம் அணுக் கழிவை சேமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தப்படி கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக்கழிவுகளை சேமித்து வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பு வைப்பதா? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிரியக்க அபாயம் உள்ள அணு கழிவுகளை அகற்ற திட்டங்கள் இல்லை என்று வைகோ கூறியுள்ளார்.
அணுக் கழிவுகளை அகற்ற இந்திய அணுசக்தி கழகத்திடம் திட்டம் இல்லாததால் 2013இல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடுத்தது. அணு கழிவுகளை பாதுகாக்க ஆழ்நிலை கருவூல மையம், சேமிக்க தொலைவில் ஓர் இடம் அமைக்க சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்தது.
அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே அமைக்க கட்டமைப்பை ஐந்தாண்டுகளில் உருவாக்கவும் சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்தது. கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமிக்க கட்டமைப்புகளை உருவாக்க தேசிய அணுமின் கழகம் 2021 ஒப்பந்தப்புள்ளி கோரியது.
கூடங்குளம் அணு உலை குறித்து மதுரை எம்பி வெங்கடேசனின் கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். கூடங்குளத்தில் வெளியாகும் கழிவுகள் அணு உலைக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
அணுக் கழிவுகளை மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச் செல்லும் வரை அருகே உள்ள மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் கூறினார். அணுக்கழிவுகளை கையால தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதை ஒன்றிய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டதாக வைகோ கூறியுள்ளார்.
நாட்டின் 22 அணு உலைகளின் கழிவுகளை கூடங்குளத்தில் குவிக்க ஒன்றிய பாஜக அரசின் திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் வைகோ. கூடங்குளத்தில் அணு உலை கழிவுகளை சேமித்து வைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது என்றும் வைகோ கூறினார்.
