மாணவி மரணத்திற்கு மதமாற்ற சாயம் பூசுவதா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
தஞ்சையில் மத மாற்றத்தின் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. அதன் பின்னர் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு இன்று காலை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறுகிறது.
ஆனால் மாணவியை மதம் மாற வற்புறுத்தியதாக கூறிய புகாரை தஞ்சை மாவட்ட எஸ்பி மறுத்திருந்தார் ஏனென்றால் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
இந்தநிலையில் மாணவி மரணத்திற்கு மத மாற்ற சாயம் பூசுவதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். விடுதியில் தனக்கு நேர்ந்த கொடுமை, மன உளைச்சலை தற்கொலை காரணம் என மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளித்த நிர்ப்பந்தமே காரணம் என போலியாக வீடியோ வெளியிட்டது என்று அவர் கூறினார். போலீஸ் பதிந்த பதிவுகளை மாற்றி மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தான் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக திசைதிருப்ப முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
மதமாற்றம் என்னும் பிரச்சினையை முன்வைத்து வீடியோ தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை என தஞ்சை எஸ்பி கூறியுள்ளார். மாணவி மரணத்தை மதமாற்ற நிர்பந்தம் என மாற்றி அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிக்கிறது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலைக் முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும் கேட்டுக்கொண்டார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
