விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கணக்கீடு செய்வதா? ஓபிஎஸ் எதிர்ப்பு!

நம் தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக. அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் பன்னீர்செல்வம். அவர் அவ்வப்போது ஆளும் கட்சியை விமர்சித்து வருவார். ஒரு சில நேரங்களில் ஆளும் கட்சியினருக்கு பல வலியுறுத்தல்களை முன்வைப்பார்.

ஓபிஎஸ்

இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கணக்கீடு செய்வதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி கேட்டுள்ளார். சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும்  இலவச மின்சார இணைப்புகளில் மின் மீட்டர் பொருத்தி கணக்கிடுவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின் மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பு வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆனால் ஏற்கனவே உள்ள மின்  இணைப்புகளில் இந்த மின் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற உத்தரவால் விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர் என்றும் ஓபிஎஸ் கூறினார். மின் மீட்டர் பொருத்தும் பணியை உடனே நிறுத்தி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment