சசிகலாவை அதிமுக ஏற்குமா? என்ற கேள்வியும்; ஒ.பன்னீர்செல்வத்தின் பதிலும்!

தற்போது நம் தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. இந்த அதிமுக கட்சி சில நாட்களுக்கு முன்புதான் பொன் விழா கொண்டாடியது .இந்தப் பொன்விழாவால் தான் தற்போது அதிமுகவில் பெரும் குழப்பம் உருவாகி உள்ளது.ஓபிஎஸ்

ஏனென்றால் பொன்விழாவின்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் பயணம் செய்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவை நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற கல்வெட்டையும் திறந்தார். இதற்கு அதிமுகவின் தரப்பினர் சசிகலா மீது  காவல்துறையில் வழக்கு தொடுத்தனர்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளரை சந்தித்து பேசினார் அதில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

சசிகலாவை அதிமுக ஏற்குமா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஓ பன்னீர்செல்வம் இவ்வாறு பதில் அளித்தார். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்; அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவுதான் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக தொண்டர்களின் இயக்கம், இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment