2002ல் குஜராத்தில் கலவரம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டதா? நீதிபதி கேள்வி;

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து தற்போது உச்ச நீதிமன்றம் நீதிபதி கலவரம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் கலவரத்தை ஏற்படுத்த விரிவான திட்டம் தீட்டப்பட்டதாக புலனாய்வில் தெரிய வந்ததா? என்று கேள்வி கேட்டுள்ளது.

superme court

ஜகியா ஜாப்ரி மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் இவ்வாறு கேள்வி கேட்டுள்ளார். அதன்படி கலவரத்துக்கு விரிவான சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது பற்றிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

குஜராத் கலவரத்தில் பயன்படுத்துவதற்காக வெடிகுண்டு தயாரிப்பது பற்றி குற்றம் சாட்டப்பட்டோர் விவாதித்துள்ளனர். தெகல்காவின் ரகசிய புலனாய்வில் எதிரிகள் பேசிக்கொண்டது தெரியவந்துள்ளதாக ஜாகியாவுக்கு ஆஜரான சிபல் தகவல் அளித்துள்ளார்.

விஎச்பி தொண்டர் ஒருவருக்கு சொந்தமான குவாரியில் இருந்து டைனமைட் வெடிகுண்டுகளை எடுத்து வந்தது பற்றி பேசியுள்ளார். எதிரிகளை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்யவுமில்லை; அவர்களது வாக்குமூலங்களை பெறவும் இல்லை என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

விஎச்பி, பஜ்ரங்தளம், சங்க பரிவார உறுப்பினர்கள் ஆயுதங்களை சேகரித்து வைத்ததைத் தெகல்கா அம்பலமாகியுள்ளது. டீசல், பைக் குண்டுகளை சேகரிப்பது பற்றி சங்கப் பரிவார உறுப்பினர்கள் பேசியதும் தெகல்கா புலனாய்வு அம்பலமாகியுள்ளது. தெகல்கா ரகசிய புலனாய்வில் அமல்படுத்திய எதையும் சிறப்பு புலனாய்வு குழு எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment