நம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிகவும் பிரதானமானவர் மகாத்மா காந்தி. ஏனென்றால் இவர் அகிம்சை வழியாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி நமக்காக சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்.
அவரை நாம் தேசத்தந்தை என்றும் மகாத்மா என்றும் அழைக்கிறோம். இதனால் அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் அவரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் புதிதாக அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் அவரின் உருவப்படம் இல்லை என்பதுபோல் தகவல் கசிந்துள்ளது. அதற்கு மாற்றாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் படம் பரிசீலிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவப்படம் உள்ளது. ஆயினும் புதிதாக வடிவமைக்கப்படவுள்ள பணத்தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் ஆகியோரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதிய தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் படங்களை பயன்படுத்த ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் கூட்டாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.