எங்கப் போனாலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமான்னு கேக்குறாங்க… தேவயானி பேச்சு…

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர். முதலில் இந்தி திரைப்படத்தின் வாயிலாக சினிமா துறையில் அறிமுகமானார்.

1996 ஆம் ஆண்டு ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றிப் பெற்று பேரும் புகழும் அடைந்தார் தேவயானி.

அடுத்ததாக 1997 ஆம் ஆண்டு ‘சூர்யவம்சம்’ திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து ‘மறுமலர்ச்சி’ (1998), ‘நினைத்தேன் வந்தாய்’ (1998), ‘நீ வருவாய் என’ (1999), ‘பாரதி’ (2000), ‘ஆனந்தம்’ (2002) போன்ற தேவயானி நடித்த படங்கள் தொடர் வெற்றிப் படங்கலாயின.

பின்னர் 2001 ஆம் ஆண்டு உதவி இயக்குனரான ராஜகுமாரனை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இதன் காரணமாக சற்று பட வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் திரும்பினார் தேவயானி. 2003 முதல் 2009 வரை சன் டிவியில் மிக பிரபலமான ‘கோலங்கள்’ தொடரில் நடித்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் தேவயானி.

தற்போது, ஒரு நேர்காணலில், மக்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், மக்கள் எங்கு பார்த்தாலும் என்னிடம் அன்பாக பேசுகின்றனர். முக்கியமாக சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் வருமான்னு கேக்குறாங்க. அது நான் முடிவு பண்ண முடியாது. இயக்குனர் விக்ரமன் தான் முடிவு பண்ணனும். அவர் சூர்யவம்சம் 2 படத்தை எடுக்க விரும்பி அதில் என்னை நடிக்க கூப்பிட்டால் நிச்சயம் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார் தேவயானி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...