நீட் தேர்வு எந்தெந்த இடத்தில் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

8c6ce812af3ef1498086cce2bd3a2c94

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த தகவலை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறைகள் குறித்தும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தற்போது www.neet.nta.nic.in  என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய தாங்கள் எழுதும் நீட் தேர்வு மையம் குறித்த தகவலை தெரிந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment