‘WIFE’ பக்கத்துல இருக்கும் போது எதுக்குங்க ‘WIFI’..?? – நடிகரை பங்கம் செய்த ரசிகர்கள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவர் தனது காதலனான விக்கி கவுசலை கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி ராஜஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் தங்களுடைய வெக்கேஷன் நாட்களை டின்ஸல் நகரத்தில் ஜாலியாக கொண்டாடிக்கொண்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் ரொம்பவுமே ஆக்டிவ்வாக இருக்கும் இந்த ஜோடி கடற்கரையில் ஜில் பன்ற நிறைய போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் விக்கி கௌஷல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோலோ புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் நோ WIFI பெட்டர் கனெக்சன் என பதிவிட்டுள்ளார். அதாவது WIFI இல்ல நான் இன்னோரு பெட்டர் கனெக்சன் தேடிட்டு இருக்கன் என அந்த புகைப்படத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நோ WIFI என்று சொல்கிறீர்கள் அப்பிறம் எப்படி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுகிறீகள் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடி மட்டுமில்லாமல் பக்கத்தில WIFE இருக்கும் பட்சத்தில் எதற்கு WIFI என்று விக்கி கௌஷல் போஸ்ட்டுக்கு நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
