தனது தொண்டு நிறுவனத்தை பயன்படுத்தி பணம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாடலாசிரியர் சினேகன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
குறிப்பாக நடிகை விஜயலட்சுமி பல பேரிடம் மோசடி வேலை விரித்து பணம் பரிப்பதாக கூறியிருந்தார். இதனை மறுத்த நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை எஸ்.பி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை விஜயலட்சுமி தன் மீது எந்தவித குற்றச்சாட்டு இல்லை என்றும் நான் பாஜக பிரமுகராக இருப்பதால் வேணுமென்று தன்னை அவமானப் படுத்துவதற்காக இந்த புகாரை கொடுத்தாக கூறியுள்ளார்.
அதோடு தன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் 20 நாட்கள் ஆகியும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
மேலும், பாஜக பிரமுகராக இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால்
தமிழகத்தில் இருக்கும் சாதாரண பெண்களுக்கு எந்த நிலைமையாக இருக்கும்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.