இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் தொடர் கனமழை பெய்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல டிசம்பர் மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கியதுடன் அவ்வப்போது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறிக் கொண்டே வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய கடலோர பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. ஜனவரி 11ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment