’குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது? பரபரப்பு தகவல்

002d45aeefcc3d29e4249611816dc5e1-3

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி மக்களின் மனதைக் கவர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்னரே குக் கோமாளி சீசன் 3 ஆரம்பிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், சமீபத்தில் தனது குட்டீஸ் ரசிகர்களிடம் பேசும்போது இன்னும் மூன்று மாதத்தில் சீசன் 3 ஆரம்பித்து விடும் என்றும் எங்களை நீங்கள் அப்போது பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த குட்டீஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஏற்கனவே இரண்டாம் சீசனில் இருந்த கோமாளிகள் அனைவரும் மூன்றாம் சீசனிலும் இருப்பார்கள் என்றும் குக்’கள் மட்டுமே 8 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வாரம் ஒருநாள் மட்டுமே படப்பிடிப்பு என்பதால் இந்த படப்பிடிப்பிற்கு வேறு பிரச்சினைகள் இருக்காது என்று கூறப்படுவதால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு முன்னரே குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.