தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டே வாரங்களில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதும் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்த நிலையில் வெளிநாட்டில் மட்டும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பாகும் டெண்ட்கொட்டா ஓடிடியில் வரும் 29ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஓடிடியை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது என்பதும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் அமேசான் நிறுவனத்தின் ஓடிடியும் அதே 29ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் ஒரே நாளில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவது, ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது