தமிழகம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது எப்போது?
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது
வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டையும் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் ஸ்டாலின் அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
