பொங்கல் பரிசு ரூ.1000 டோக்கன் எப்போது கிடைக்கும்? – விவரம் இதோ!

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2023-ம் ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பு குறித்து அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதன் படி, நடப்பாண்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

புனேவில் பயங்கரம்!! ‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்த சகோதரர்கள்..!!

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை ஜனவரி 2-ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த சூழலில் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வரும் 27-ம் தேதி முதல் பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் நாள்தோறும் 100 முதல் 200 டோக்கன் கார்டுகள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் எந்த தேதியில்.. எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் டோக்கன்களில் இடம் பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல் சூளையில் தீ விபத்து: 9 பேர் உடல் கருகி பலி..!!

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பானது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும் பெறமுடியும் எனவும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.