கள்ளக்குறிச்சி பள்ளி எப்போது திறக்கப்படும்? – பள்ளி நிர்வாகம் அதிரடி அப்டேட்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டகாரர்கல் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் சூறையாடப்பட்டது.

இதனால் மீண்டும் பள்ளிகள் தொடங்குமா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் இன்று முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

எனவே சேதமடைந்த வகுப்பறைகள், மாணவர்களின் இருக்கைகள் மற்றும் கரும்பலகை உள்ளிட்டவைகள் சீர்செய்யப்பட்டு இன்னும் பத்து தினங்களில் பள்ளி திறக்கப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment