அஜித் மற்றும் விஷ்ணுவர்த்தன் இணைந்த மூன்று திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து மீண்டும் இருவரும் எப்போது இணைவார்கள் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்
இந்த நிலையில் வலிமை படத்தை அடுத்து அஜித் படத்தை இயக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் விஷ்ணுவர்தனின் பெயர் முதலிடம் இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச் வினோத் அஜித் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒருவேளை அந்த படத்தை வினோத் இயக்கவில்லை என்றால் அடுத்த சாய்ஸாக லிஸ்டில் விஷ்ணுவர்தன் தான் இருப்பதாக கூறப்படுகிறது
அஜித்துக்காகவிஷ்ணுவர்தன் ஒரு சரித்திர கதையை எழுதி வைத்துள்ளார் என்றும் ராஜராஜன் சோழன் குறித்த அந்தக் கதையைத்தான் விஷ்ணுவர்த்தன் படமாக எடுப்பார் என்றும் கூறப்படுகிறது அஜித் விஷ்ணுவர்தன் விரைவில் இணைய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்