நயன்தாரா-விக்னேஷ் திருமணம் எப்போது?

d1bbf4e6b8f15bb65c315384930991fa-1

நடிகை நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்காக பணம் சேர்த்து வருகிறோம் என்றும் பணம் சேர்ந்தவுடன் திருமணம் செய்து கொள்வோம் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

மேலும் கொரோனா தொற்று தற்போது தீவிரமாக இருப்பதால் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா உடன் இருக்கும் தருணங்கள் தான் தனக்கு மகிழ்ச்சியான தருணம் என்றும் அவருடன் இருக்கும் எந்த இடமும் தனக்கு பிடித்த இடம் என்றும் கூறியுள்ளார். 

நயன்தாரா அம்மா தனக்கு மிகப் பிடித்த நபர் என்றும் அவர் மிகவும் மனிதநேயம் மிக்கவர் என்றும் கூறியுள்ளார். நயன்தாரா வீட்டில் தானே சமையல் செய்வார் என்றும் பாத்திரங்களை அவரே சுத்தம் செய்வார் என்றும் மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். நயன்தாராவுக்கு தான் கொடுத்த பரிசுகளில் தனக்கு மிகவும் பிடித்த பரிசு தங்கமே பாடல் தான் என்றும் கேள்வி ஒன்றுக்கு விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

071d141aabf3587ea1284cc60dc172d2-3

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.