10 முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது? செய்முறை தேர்வுகள் நடைபெறுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் தான் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்க உள்ளது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 17ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு முடிவு ஜூன் 23-ம் தேதியும் வெளியிட வாய்ப்புள்ளது. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஜூலை 7ஆம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ஏப்ரல் 25ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். அந்த படி 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடக்கும் என்றும் அவர் கூறினார்.

10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையை வெளியிட பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த தகவலையும் அறிவித்தார். இரண்டு ஆண்டுக்கு பின்பு பத்தாம் வகுப்பு தேர்வு, ஓராண்டுக்குப் பிறகு 11, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment