
தமிழகம்
அதிமுகவின் அடுத்த செயற்குழுக்கூட்டம் எப்போது? தேதி அறிவிப்பு;
இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாவட்ட நிர்வாகிகள் வந்தனர்.
மேலும் இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப் படாமல் ரத்து செய்யப்பட்டதாக மேடையில் இருந்தவர்கள் வரிசையாக சொன்னார்கள். கூட்டத்தின் இடையிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கிளம்பியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
மேலும் அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். இவரை அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்தகட்ட கூட்டம் பற்றிய தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
மேலும் இவரின் பதவியேற்பும் செல்லாது என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். அவைத் தலைவரை நியமிப்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து தான் அறிவிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.
