குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்போது? முப்படை தலைமை தளபதியோடு அவரின் மனைவியும் உயிரிழப்பு!

இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முற்பகல் 11:47 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். 12:20 காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் பகுதிக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கையில் திடீரென்று ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

தரையிறங்க வெறும் ஐந்து நிமிடமே இருந்த நிலையில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குறிப்பாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்து மீட்கப்பட்ட ராணுவ கேப்டனுக்கு மட்டும் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டனுக்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்தார். அவரோடு சேர்த்து அவரது மனைவி மதுலிகா ராவத்தும் விபத்தில் இறந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment