Connect with us

புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் அறிவிப்பு எப்போது? அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

Tamil Nadu

புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் அறிவிப்பு எப்போது? அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

6e0f343382b73779ee78326c09aedc54-3

கடந்த அதிமுக ஆட்சியில் புதுப்புது மாவட்டங்கள் உருவான நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் புதிய நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அதற்குரிய பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் 

மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒருசில நகராட்சிகள் மாநகராட்சி ஆகும் என்றும், ஒருசில பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாறும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்றும் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார் 

இதனை அடுத்து விரைவில் நகராட்சிகள், மாநகராட்சிகளாகவும்,பேரூராட்சிகள் நகராட்சிகள் ஆகவும் மாறும் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top