இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி எப்போது ? ஒன்றிய அரசு தகவல்..
கடந்த 2019- ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்சின் தாக்கமானது தற்போது உலகமெங்கும் பல கோடி மக்களை பாதித்து, பல லட்சம் நபர்களின் உயிரைப்பறித்து.
இதற்கு அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை கொண்டுவந்தது. இருப்பினும் இந்த வைரஸ்சை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கமானது தற்போது சற்று படிபடியாக குறைந்து வருகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி பேராயுதமாக அமைந்துள்ளதால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தடுப்பூசி போடப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
