ஏழைகளின் ஊட்டியில் கோடை விழா எப்போது? அமைச்சர் அதிரடி பதில் !!

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் வரும் 25-ஆம் தேதி கோடை விழா தொடங்கும் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, டைட்டில் பார்க் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்காக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த இடங்களை அமைச்சர் கே.என் நேரு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஏற்காட்டில் வரும் 26ம் தேதி கோடை விழா தொடங்கும் என கூறினார்.

இதனிடையே கொடை விழாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். விழாவின் ஒரு பகுதியாக அண்ணா பூங்காவில் மலர் மற்றும் காய்கறி கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment