Connect with us

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Tamil Nadu

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு!

a599306a9aec0f1e8c5f0bdf08dbc706

நாளை முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்த அறிவிப்பை சற்றுமுன் பார்த்த நிலையில் தான் சற்றுமுன் வெளியான தகவலின்படி நாளை முதல் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித் துறை அறிவிக்கப்பட்டுள்ளது

பிஇ, பிடெக் உள்பட அனைத்து பொறியியல் கல்லூரி படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்கள் பொறியியல் படிப்புகள் விண்ணப்பிக்க www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்றும் தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது 

இதனை அடுத்து பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் மேற்கண்ட இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top