பொறியியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

c4d4056f1b8b80d8c6d43af1fa2bbe32

பொறியியல் கல்லூரிகளுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 18 முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் இந்த வகுப்புகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

இப்போதைக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும் என்றும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவதற்கான ஒழுங்கு முறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது

மேலும் நடப்பு செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று தேர்வு அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment