Tamil Nadu
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? முதலமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனை இன்று மாலை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர்ம் உள்ளாட்சித் துறையின் செயலாளர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்
இந்த ஆலோசனையில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து தேதியை முடிவு செய்து அந்த தேதியை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கொரோனா காலத்தில் நடத்துவது எப்படி? பாதுகாப்பு அம்சங்களை கடை பிடிப்பது எப்படி? என்பது குறித்தும் இன்றைய ஆலோசனைகள் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்தால் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
