12ஆம் வகுப்பு மதிப்பெண் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு!

d5420e1b60cf99a8eede6a383611519a-1

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று கூறப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dg2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களுடைய 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஜூலை 21ஆம் தேதி முதல் www.deg.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆகஸ்டு 1ஆம் தேதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னரே 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்றுதான் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment