10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி வெளியீடு !!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பொதுதேர்வுகள் நடைபெறுமா என கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
இதனிடையெ கடந்த பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதற்கிடையில் இந்தாண்டு கட்டாயம் பொதுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொதுதேர்வுக்கான பாடவாரியான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
