சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டிரைலர் எப்போது?

046fbaaa9f22be71a277d15c9346d46b

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் அந்த வகையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்தநிலையில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தின் டிரைலர் 27ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாக்டர் திரைப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார் என்பதும் காமெடி கேரக்டரில் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.