
Tamil Nadu
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது..? – அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அன்மையில் சட்டச்சபையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தேனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்னும் ஓராண்டில் ஆட்சி மாற்றம் வந்துவிடும் என கூறினார்.
குறிப்பாக கூட்டுறவு துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் உள்ள காலிபணியிடங்களுக்கு 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்படுவதாக அவர் கூறினார். தமிழக முதல்வர் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
மேலும், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் படி கட்டாயம் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
