News
தமிழகத்தில் ஏசி பேருந்துகள் இயங்குவது எப்போது? போக்குவரத்து துறை தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பேருந்துகளை இயங்கி வருகின்றன என்பது தெரிந்ததே. இருப்பினும் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பயணிகள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏசி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 60 நகரப் பேருந்துகள் மற்றும் 642 புறநகர் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சானிடைசர் மூலம் கைகளால் சுத்தப்படுத்திய பிறகு தான் ஏசி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்தன
ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது பயணிகள் மத்தியில் இருந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
