சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

bbd4d5bf72beae205750431c23257e20-1-2

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தேதி எப்போது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியானது. இதனை அடுத்து விரைவில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிட சிபிஎஸ்சி அமைப்பு குழு ஒன்றை அமைத்து உள்ளது என்பதும் இந்த பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருப்பதால் மதிப்பெண் பட்டியல் வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 26 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் அதற்கு முன்பே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment