பொங்கல் பரிசு டோக்கன்கள் எப்போது? – அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!!

தமிழகத்தில் வருகின்ற 30-ம் தேதி முதல் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

குறிப்பாக ரூ.1000 ரொக்க பணம் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2023 பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்க பணம் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார்.

அதன் படி, குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் எனவும், சர்க்கரை அட்டை உள்ளவர்களுக்கு வழங்கப்படாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறி உள்ளார். இருப்பினும் சூழ்நிலைக்கு ஏற்ப டோக்கன் வழங்குவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாளைக்கு 300 டோக்கன் வீட்டிற்கு சென்று வழங்கப்படும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். அதே போல் கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.