
News
கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி-கட்டாயமாக இருக்க உத்தரவு!!
நம் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு விதமான திட்டங்களை உன்னிப்பாக கவனித்து அமல்படுத்துகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் சிரமமின்றி செல்வதற்கு திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி திட்டம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்ய அறநிலையத் துறையும் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை திருக்கோவில் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
திருக்கோவில் நுழைவுவாயில் அருகே குறைந்தபட்சம் சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அறநிலையத்துறையும் உன்னிப்பாக கவனித்து பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்துவது தெரிகிறது.
