உக்ரைனில் இருந்து மீண்டும் கோதுமை ஏற்றுமதி – ரஷ்யா ஒப்பந்தம்!!!

ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைன் துறைமுகங்களில் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில் கருங்கடல் பகுதிகளில் உள்ள உக்ரைன் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கோதுமை உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கும் உக்ரைன் போர் தொடுத்த காரணத்தினால் 2.2 கோடி டன் கோதுமை, பார்லி, உணவு தானியங்கள் உக்ரைனிய துறைமுகங்களில் முடங்கியுள்ளது. இந்த சூழலில் துருக்கி மற்றும் ஐ.நா உதவியுடன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வதற்கான உக்ரைன் – ரஷ்யா ஒப்பந்தமாகியுள்ளது.

இதனால் உக்ரைனில் ஒடிசா, யூஷ்னே, கோர்னோமோர்ஸ்க் துறைமுகங்களில் உள்ள உணவு தானியங்களை உக்ரைன் கப்பல்கள் மூலம் துருக்கி நாடுகளுக்கு அனுப்ப இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

மேலும், இந்த ஒப்பந்தம் அடுத்த 120 நாட்கள் வரை இருக்கும் என்றும் மாதத்திற்கு 50 லட்சம் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment