மக்களே கவனம்!! நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது…

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனாளிகளின் வசதிகளுக்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனமும் புதுமையான அப்டேட்களை கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மார்ச் 31 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு  வாட்ஸ்அப்   சேவைகளை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, KaiOS, iOS, Android ஆகிய இயங்குதளங்கள் நிறுவப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவைகளை தடைசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பழைய இயங்குதள பதிவுகளுக்கு புதிய அப்டேட் கொடுக்க முடியாத சூழல் உருவாகுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் 4.1 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் இருந்தால் இந்த செயலி இயங்காது என கூறியுள்ளது.

மேலும், மொபைல் போன்களில் kaiOS இயங்குதளத்தில் செயல்படும் வாட்ஸ் அப்பை இயக்க kaiOS பதிப்பு 2.5 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு கண்டிப்பாக தேவை என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த பதிப்புகளில் ஜியோபோன்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment