வாட்ஸ் ஆப் பயனாளர்களே உஷார்!! 37.16 லட்சம் கணக்குகள் முடக்கம்.!!

இந்தியாவில் கடந்த மாதம் 37.16 லட்சம் வாட்ஸ் அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில் ஒவ்வொரு மாதமும் பயனாளர்களின் புகார் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 37.16 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை முடங்கியுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இது முந்தைய மாதங்களில் தடை செய்ததை விட 60% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கடந்த அக்டோபர் மாதம் மொத்தமாக 23.2 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் சுமார் 10 லட்சம் கணக்குகள் பயனாளர்களிடம் இருந்து எந்த ஒரு புகாரும் வருவதற்கு முன்னதாகவே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியபனை மிக்க கருத்துக்களை பகிரும் கணக்குகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க குறைத்தீர்ப்பு ஒழுங்கு முறையினை அமைக்க வேண்டுமென மத்திய அரசு புதிய விதிகளை அமல்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.