சாட் லாக் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ் அப் : சாட்களை லாக் செய்வது எப்படி?

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அவ்வப்போது தனது பயனாளிகளுக்கு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பதும் ஒவ்வொரு அறிமுகப்படுத்தப்படும் அம்சமும் பயனாளிகளின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பயனர்களின் தனிப்பட்ட சாட்களை லாக் செய்து கொள்ளும் புதிய வசதியான  ஷாட் லாக் என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் லாக் செய்ய விரும்பும் சாட்டுக்கு செல்லவும்.
2. தொடர்பு அல்லது குழு சுயவிவரப் படத்தை கிளிக் செய்யவும்
3. கீழே ஸ்க்ரோல் செய்து சாட்லாக் என்பதை கிளிக் செய்யவும்
4. பின்னை உள்ளிட்டு உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்.

லாக் செய்த சாட்டை திறக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

1. உங்கள் சாட் இன்பாக்ஸை மெதுவாக கீழே இழுக்கவும்.
2. உங்கள் பின்னை உள்ளிடவும் அல்லது உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்.
3. உங்கள் லாக் செய்த சாட் பின்னர் தோன்றும்.

வாட்ஸ் அப் சாட்  பற்றி மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே:

* தனிப்பட்ட தொடர்புகள் அல்லது குழுக்களுடன் மட்டுமே நீங்கள் சாட்களை லாக் செய்ய முடியும்.
* காப்பகப்படுத்தப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட சாட்களை உங்களால் லாக் செய்ய முடியாது.
* உங்கள் பின்னை மறந்துவிட்டால், பர்கெட் பாஸ்வேர்டு என்ற அம்சத்தின் மூலம் அதை மீட்டமைக்கலாம்.

உங்கள் வாட்ஸ் அப் உரையாடல்களில் கூடுதல் தனியுரிமையை சேர்க்க சாட் லாக் ஒரு பயனுள்ள வழியாகும். நீங்கள் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பும் முக்கியமான சாட்கள் ஏதேனும் இருந்தால், அதற்கு இந்த வசதியை பயன்படுத்தவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.